சந்து கிடைத்தாலும் போதும் எடப்பாடியாரின் அரசை அலசி காயப்போடுவதே தினகரனின் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இப்போது மீனவர்களின் பிரச்னையை எடுத்து வைத்துக் கொண்டு சபித்துக் கொட்டியிருக்கிறார் மனிதர்.
அதாவது இலங்கை அரசின் வெளிநாட்டு மீன் பிடி படகுகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத காலம் சிறை என்று தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் இதுபற்றி பேசியிருக்கும் தினகரன் “மீனவர்கள் பிரச்னையில் மெத்தனப் போக்கை பழனிச்சாமியின் அரசு தொடர்ந்து கடைபிடிக்குமேயானால் அது மீனவ இனத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும். தங்கள் சுயநலத்துக்காக மத்திய அரசுடன் பேசி உறவாடும் பழனிசாமி, மக்கள் பிரச்னைக்காக பேசுவதில்லை. இந்த துரோகத்தை மீனவ மக்கள் எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டார்கள்.” என்று தட்டி தூக்கிட முயற்சிக்கிறார் மீனவர் வாக்கு வங்கியை.
நீ பேசு ராசா!
Discussion about this post