சர்கார் படத்தின் டீசர் நேற்று மாலை ரிலீசாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு எப்படி மெர்சல் ஸ்பெஷலோ, அதை விட ஒரு படி மேல் ஸ்பெஷலாகி இருக்கிறது சர்கார் திரைப்படம். ஸ்டைலிஷான விஜய் . அரசியல் அனல் தெறிக்கும் கதை என எக்கச்சக்கமான பவர் பேக்கேஜுகள் இந்த படத்தில் இருப்பதால் வெகு ஆர்வமாக இந்த படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, மிக கச்சிதமாக பூர்த்தி செய்திருக்கிறது இந்த டீசர்.
படம் ரிலீசாக இன்னும் சில நாட்களே இருக்கும் தருணத்தில் முன்னதாக படத்தினை பார்த்த விஜய் இந்த படத்தின் எடிட்டரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். பொதுவாக திறமை எங்கு இருந்தாலும் மனம் விட்டு பாராட்டும் விஜய் , சர்கார் படத்தின் முன்னோட்டத்தினை பார்த்த பிறகு எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தை பாராட்டி இருக்கிறார்.
மிகவும் குறிகிய காலத்துக்குள் , ரொம்ப பிரமாதமா எடிட் பண்ணிருக்கீங்க என ,விஜய் மனம் விட்டு பாரட்டியதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீகர்.சென்ற முறை மெர்சலுக்கு வந்தது போலவே சர்காருக்கும் சில பல தடைகள் வந்திருந்தாலும், தடைகளை தகர்த்து சர்கார் சாதனை படைக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கும் விஜய் ரசிகரகளுக்கு சர்கார் குறித்து வரும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மிகுந்த சந்தோஷத்தை அளித்து வருகிறது.
Discussion about this post