தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் 4 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.இந்நிலையில் நேற்று 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார்.இருப்பினும் பீல்டிங்கில் அசத்தினார்.
குறிப்பாக சைனி வீசி 7வது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு அடித்தார் ராஸ் டெய்லர். சிக்ஸருக்கு கோட்டுக்குள் சென்ற பந்தை அந்தரத்தில் பாய்ந்து பிடித்து மீண்டும் மைதானத்தின் உள்பக்கத்திற்குள் பறந்தபடியே வீசி சிக்ஸரை தடுத்தார் சஞ்சு சாம்சன்.
அவரின் இந்த அசாத்தியமான பீல்டிங் முயற்சியை ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post