டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கணை சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19வது இடம் வகிக்கும் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இப்போட்டி 30 நிமிடங்கள் நீடித்தது.
அவர் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த தாய் சூ யிங் உடன் விளையாட இருக்கிறார்.
Discussion about this post