உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக திகழ்வது வாட்ஸ் ஆப்.இதையடுத்து தற்போது ஏராளமானோரை கவர்ந்த செயலி என்றால் அது டிக்டாக் செயலி தான்.
இந்த செயலியை தடைசெய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறும்போதும் டிக்டாக் செயலியை உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 70 கோடி பேர் இந்த டிக்டாக் செயலியை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் டாங்கி(Tangi) நிற செயலியை களமிறக்கவுள்ளது.
டிக்டாக் செயலியைப் போன்று இதில் குறுகிய வீடியோக்களை உருவாக்கலாம். முதற்கட்டமாக இணையதளம் மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலியில் பல புதுமையான விஷயங்கள் புகுத்தப்படுகிறது என்றும் ஒரு நிமிட அளவிலான குறுகிய வீடியோக்களை இதில் உருவாக்கலாம் என்றும் டாங்கி செயலி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
தற்போது சோதனையில் இருக்கும் இந்த டாங்கி(Tangi) செயலி விரைவில் இணையதளம் மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post