ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாரதிய ஜனதாவும் லே பகுதியில் காங்கிரஸும் அதிக இடங்களில் வென்றுள்ளன
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்றது. இதில் மொத்முள்ள 79 நகராட்சிகளில் 52 இடங்களில்மட்டுமே தேர்தல் நடைபெற்றது. 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.
கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 1,145 வார்டுகளில் 3,372 பேர் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலை தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை புறக்கணித்தன. மொத்தம் உள்ள 79 உள்ளூராட்சி பகுதிகளில் 27 பகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை.
இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு வருகின்றன. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாரதிய ஜனதாவும் லே பகுதியில் காங்கிரஸும் அதிக இடங்களில் வென்றுள்ளன
இன்று (20.10.2018) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இன்றிரவு 8 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர்கள் 157 இடங்களிலும், பா.ஜ.க. வேட்பாளர்கள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
Discussion about this post