இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் கிருமி வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட 18 நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 17,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஅதில் ‘கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது’.
Discussion about this post