உலகம் முழுவதும் 14,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சீனாவில் பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் சுத்தம் செய்ய வேண்டும். டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை. கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.அந்தரங்க சுத்தம் மற்றும் உணவுச் சுத்தம் கறாராகப் பேணப்பட வேண்டும்.நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது.
எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்சென்று சீன உணவுகளை உண்பதைப்பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.
Discussion about this post