நிபுணன் படத்தில்நடித்த போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நடிக ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார்.
‘மீ டு’ புகாரில்இன்று சிக்குவோமா? நாளை சிக்குவோமா என திரையுலகைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கதிகலங்கி போயிருக்கும் இந்த சூழ்நிலையில், நடிகர் அர்ஜுனை பஞ்சாயத்துக்கு இழுத்திருக்கிறார் ஒரு நடிகை. இதுகுறித்து நடிகை ஸ்தி ஹரிஹரன் அவரது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது…
எனக்கு பாலியல் தொல்லைகள் நடக்கும் போதெல்லாம உடல் ரீதியாக அங்கிருந்து தப்பிவிட்டேன். ஆனால் மனரீதியாக அது பயத்தை உண்டாக்கி என்னை பாதித்து விட்டது. கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்திலிருந்து வெளியே வர நான் மிகுந்த சிரமம்பட்டேன். அப்போது இரு மொழிகளில் உருவாகி வந்த ஒரு படத்தில் நான் நடித்து வந்தேன். அதில் நடிகர் அர்ஜுன் சர்ஜா நாயகனாக நடித்தார். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில்இருந்தேன். அந்த படத்தில்நான் அவரது மனைவியாக நடித்தேன்.
ஒரு நாள் படப்பிடிப்பில்நாங்கள் இருந்தபோது, இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் நானும் அவரும் கட்டிப்பிடித்து நடிக்க வேண்டி இருந்தது. அந்தக் காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்தபோது, அர்ஜுன் திடீரென என்னைக் கட்டிப்பிடித்து என் பின்பகுதியை மேலும் கீழும் தடவினார். வேண்டுமென்றால் இந்தக் காட்சியை வைத்துக் கொள்ளலாமா? என இயக்குநரை பார்த்துக் கேட்டார்.
சினிமாவில் இயல்பாக காட்சிகள் வரவேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொள்வது தவறு. அவர் சினிமாவுக்காக அப்படி நடந்து கொண்டாலும் அது தவறுதான். அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Discussion about this post