வடசென்னை திரைப்படத்தில் மீனவர்களை கொச்சைப்படுத்துவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அப்படத்தை தடை விதிக்க வேண்டும் என காசிமேடு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் மீனவர்களை கொள்ளையர்களாகவும், கொலை செய்யும் ரவுடிகளாகவும், ஆபாசமாக பேசுபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது ஒட்டுமொத்த மீனவ சமூகத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, படத்தை தடை செய்யக்கோரி சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்திற்கு அரசு உடனடியாக தடை விதிக்கா விட்டால் நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் வீடுகளையும், படம் வெளிவரும் திரையரங்குகளையும் முற்றுகையிடப்போவதாக மீனவர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post