நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜூன் நிபுணன் படிப்பிடிப்பில் ஒத்திகையின் போது, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
தன்னிடம் அனுமதி கேட்காமல் அர்ஜுன் அவ்வாறு நடந்து கொண்டது தவறு என கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
சுமார் 250 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் மீது முதல் முறையாக பாலியல் குற்றச்சாட்டை ஒரு நடிகை வைத்துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகம அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
நடிகைகளின் தொடர் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே தமது இணையதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகர் அர்ஜூன், தாம் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்ததில்லை எனவும், ஸ்ருதியின் குற்றச்சாட்டின் பின்னணியில் யாரோ இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post