இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்போதுவரை 1100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மேலும், சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்க்கு ‘கோவிட்-19’ என்று உலக சுகாதார அமைப்பு புதிய பெயரை சூட்டியுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டட்ரோஸ் அதான்நோம் கிப்ரெய்சஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-‘கொரோனா வைரஸ், டிசீஸ் ஆகிய பெயர்களை இணைத்து ‘கோவிட்-19’ என்ற புது சொல்லை உருவாக்கியுள்ளோம்.
தவறான சொற்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த பெயரை நாங்கள் உருவாக்கியுள்ளோம்’என்று கூறினார்.
Discussion about this post