இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்போதுவரை 1012 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக ஹாங்காங்கை சேர்ந்தவரும் ஆசியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாருமான நடிகர் ஜாக்கிசான் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த கொடூர கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யென் பணம் வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-‘அறிவியலும், தொழில்நுட்பமும்தான் இந்த வைரஸை வெற்றிகொள்ள இருக்கும் வழி. என்னைப்போல் பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
கொரோனாவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இந்த கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென்((இந்திய மதிப்பில் ஒரு கோடி) தொகையை கொடுத்து நன்றி சொல்ல விரும்புகிறேன்’என்று கூறினார்.
Discussion about this post