ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சர்கார் வரும் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதே நாளில், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி ஆகிய படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அட்டகத்தி தினேஷ் – அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சர்கார் படத்தை தவிர மற்ற படங்கள் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இதனிடையே, படப்பிடிப்பு முடிவடையாததால் சூர்யா நடித்த என்ஜிகே படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், நாங்க விஜயை கண்டு பயப்படுல என சூர்யா ரசிகர்கள் சவால் விடுகின்றனர்.
Discussion about this post