தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனரான வருண் என்பவர் பரபரப்பை கிளப்பியிருந்தார். இவர் எழுத்தாளர் சங்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு செங்கோல் என்ற தலைப்பில் தனது முதல் படத்திற்கான கதையை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடி தான் சர்கார் என்ற பெயரில் படமாக்கியுள்ளதாக வருண் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.அதில் இரண்டு கதைகளும் 100 சதவீதம் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவான கத்தி படத்திற்கும் இதே போன்றதொரு பிரச்சினை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கதை திருடப்பட்டதா அல்லது சொந்த கதையா என்பது ஏ.ஆர்.முருகதாஸ்கே வெளிச்சம்.
Discussion about this post