கவிஞர் வைரமுத்துவின் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளிக்க நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்தை நாடாதது ஏன் என்ற கேள்விக்கு, முக்கிய ஆதாரமான பாஸ்போர்ட்டை தேடிவருவதாகவும், சம்பவம் நடந்தது எந்த வருடம் என்று சரியாக நினைவில் இல்லை என்றும் பாடகி சின்மயி வினோத பதில் அளித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் இந்த காமெடி காட்சி போல செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் தவித்த பாடகி சின்மயி, தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை அளித்தது எந்த ஆண்டு என்று சரியாக நினைவில் இல்லை என்றும் தாங்கள் சுவிட்சர்லாந்து சென்று வந்த பாஸ்போர்ட்டை காணவில்லை என்றும் முக்கிய ஆதாரமான அந்த பாஸ்போர்ட்டை வீட்டில் தேடிவருவதாகவும் பதில் அளித்தார்
பாலியல் புகார்களுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளதா என்றும் , நீதிமன்றத்தை நாடாதது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பிய ஆண் செய்தியாளர் ஒருவரை தனியாக எழுந்துவரச்சொல்லி சத்தமிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், இருதரப்பை அழைத்து வந்து பஞ்சாயத்து செய்வதை வாடிக்கையாக செய்து வந்த லட்சுமிராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பிலும் வழக்கம் போல தனது வேலையை சிறப்பாக செய்தார். ஒரு கட்டத்தில் செய்தியாளர்களின் அடுக்கடுக்காண கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் திணறிப்போன சின்மயி எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டார்
மீடூ என்ற பெயரில் குற்றச்சாட்டு முன்வைப்பதால் அவமானத்துக்கு பயந்து பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் பிரபலங்கள் ஈடுபட தயங்குவர் என்று மீடூ பதிவிடும் பெண்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் பிரபலமான நபர்கள் மீது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை டிவிட்டரில் அவதூறாக தெரிவிப்பதால், சம்பந்தபட்ட பிரபலத்தின் வீட்டில் உள்ள பெண்களின் மனநிலை, அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை கேலிக்குறியதாக அமைந்துவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதே நேரத்தில் புகார் தெரிவித்த சின்மயி, லீனாமணிமேகலை, ஸ்ரீ ரஞ்சனி, என ஒருவர் கூட நீதிமன்றத்தையோ, காவல் நிலையத்தையோ ஏன் நாடவில்லை என்பதும், அவர்கள் தங்கள் புகாருக்கு ஆதாரம் எதனையும் வெளியிடவில்லை என்பதையும் உற்று நோக்கினால் இவர்களின் மீடூ கோஷத்தின் மீது பலத்த சந்தேகங்கள் எழுவதாகவும் கேள்வி எழுப்புகின்றனர்.
Discussion about this post