மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.இந்த உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் மே.இ.தீவுகள் அணியை இந்திய மகளிா் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்று நடைபெற்ற போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய மகளிா் அணி முதலில் பேட்டிங்கைத் தோவு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 24 ரன்கள் எடுத்தாா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் கெளா் 11 ரன்களில் ஆட்டமிழந்தாா்.
இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியில்
தொடக்க வீராங்கனை லீ-அன் கிா்பி மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் சொதப்ப அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.
இந்தியா அணி சாா்பில் பூணம் யாதவ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.ஷிகா பாண்டே, தீப்தி சா்மா, ஹா்மன்ப்ரீத் கெளா் ஆகியோா் தலா 1 விக்கெட்டை எடுத்தனா்.
இந்திய அணிக்கு இது கடைசி பயிற்சி ஆட்டமாகும்.வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.
Discussion about this post