’கட்சி துவங்குவதற்கான 90% பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால் டிசம்பர் 12-ல் துவங்குகிறேன் என்பது வெறும் வதந்தி.’ என்று ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் திரிகொளுத்திவிட்டு போனார் ஒரு பரபர பட்டாசுக்கு.
ஆனால் ’பேட்ட’ படத்தோடு சினிமாவுக்கு ரஜினி லீவு விடப்போவதில்லை மீண்டும் அடுத்தடுத்து கமிட் ஆக இருக்கிறார்! என்கிறார்கள். அரசியல் வேலைகளை பரபரவென பார்க்கப்போகும் மூடில் எல்லாம் அவர் இல்லையாம்.
ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுவதற்கு அவர் முடிவெடுத்து வைத்திருக்கிறார்! என்பது தெரிந்த சேதி. ஆனால் கையோடு பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கும் ஒரு படம் செய்து தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். அதையும் நிறைவேற்றியாக வேண்டும். சங்கிலி முருகன் தயாரிக்கும் படத்தை இயக்குவது கே.எஸ்.ஆர். ஆக கூட இருக்கலாம் என்கிறார்கள்.
இதற்கிடையில், கவிதாலயாவுக்காக ரஜினி ஒரு படம் பண்ண ஆசைப்படுகிறாராம். பாலசந்தர் இறந்த பிறகு கிட்டத்தட்ட சினிமா ஹீட்டிலிருந்து அந்த குடும்பமும், அந்த நிறுவனமும் ஒதுங்கியே இருப்பது ரஜினியின் மனதை நெருட வைக்கிறதாம். பாலசந்தரின் மகள், மருமகன் சைடில் பேசி ஓ.கே. ஆகிவிட்டது என்கிறார்கள். லேட்டஸ்ட் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு கவிதாலயாவுக்காக கமிட் ஆகலாமாம்.
இதில் ஒரு பியூட்டி இந்த படத்தை அந்த நிறுவனத்துக்காக இயக்க இருப்பது ஹரி என்கிறார்கள். கவிதாலயாவுக்கு ஹரி செண்டிமெண்டாக ஹிட் இயக்குநர். மேலும் ‘ஐயா’ படத்திலேயே ரஜினி – ஹரி இணைந்திருக்க வேண்டும். அப்போ மிஸ் ஆனதை இப்போ நிறைவேற்றிக் கொள்கிறாராம் ஹரி! வழக்கமான ஹரி படமாக இல்லாமல், ரஜினியின் வயதுக்கு ஏற்பவும், இயக்குநரின் பரபரப்பு திரைக்கதையில் பாதி அளவுக்குமாகவும் இருக்குமாம் இந்தப் படம்.
சூப்பருல்ல.
Discussion about this post