விஜய் ரசிகர்கள் வெகு ஆவலாய் எதிர்பார்த்த ‘சர்க்கார்’படத்தின் டீசர் நேற்று ஆரவாரமாய் ரிலீஸானது. லைக்கில் எகிறி அடிக்கும் அதேவேளையில், டிஸ்லைக்ஸும் ஏறி அடிக்கிறது.
இது ஒரு புறமிருக்க, விஜய் ரசிகர்களுக்கே இந்த டீஸரில் பல குறைகள் இருப்பதை கண்டு பொங்குகிறார்கள்.
அதன் லிஸ்ட் இதோ…
* டீசரின் துவக்கத்தில் வரும் வாய்ஸ் ஓவர் வாய்ஸ் மிக சாதாரணமாகவும், மொக்கையாகவும் இருக்கிறது.
* மொத்த டீசரை பார்க்கும்போது கதையின் ஓட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே சர்ப்பரைஸ் கெட்டுப் போச்சு. சர்க்கார் கதை இதுதான் என்று ஏகத்துக்கும் கெஸ் பண்ண முடிந்துவிட்டது.
* கத்தி படத்தில் வரும் ’டெரா டெரா’ பாடல் போலவே இதில் வரும் டூயட்டின் தோற்றமும் உள்ளது.
* நயா பைசா அளவுக்கும் காமெடி இல்லை டீசரில்.
என்று நீள்கிறது.
ஆக மொத்தத்தில் சர்க்கார் படத்தில் டீசர் மெர்சலாக இருக்கிறது ஆனால் தெறிக்கவிடவில்லை! என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
மிக மிக குறிப்பாக டீசர் மூலமாக கதை உடைபட்டு, சர்ப்பரைஸ் போயே போச்சு! என்பதுதான் பெரிய புலம்பல்
Discussion about this post