கடந்த 14ந்தேதி மத்திய அரசின் தொலைதொடர்பு துறை வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டது.
இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடி அரசுக்கு வழங்க வேண்டும். அந்திவகையில் கடந்த 17ந்தேதி வோடோபோன் ஐடியா நிறுவனம் ரூ.2,500 கோடி வழங்கியது. இந்த வார இறுதியில் ரூ.1,000 கோடி வழங்குவதாகவும் கூறியது.
அதன்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடியை இன்று செலுத்தியுள்ளது.
Discussion about this post