ஜெர்மனி நாட்டின் ஹனாவு நகரில், இருவேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
ஹனாவு நகரில் உள்ள 2 பார்களில், தனித்தனியே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு தீவிரவாத இயக்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற நோக்கத்துடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post