சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். சபரிமலை விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்து குழப்பமாக உள்ளதாகவும் அவரின் தெளிவின்மையை காட்டுவதாகவும் விமர்சித்தார். எந்த கருத்தாக இருந்தாலும் ஆணித் தரமாக சொல்ல வேண்டும் என்றும் அப்படிப்பட்டவரை தான் கூடியவர்கள்தான் தலைவனாக ஏற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும், கழுவுகிற தண்ணீரில் நழுவுகிற மீனைப்போல இருக்க கூடாது என்றும் அப்படிப்பட்டவர்களை நழுவ விட்டு விட வேண்டும் என்று மக்களுக்கு தெரியும் எனவும் கூறிய அவர், ரஜினி சொன்ன கருத்து சரியா, இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
Discussion about this post