இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் இன்று முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெலிங்டனில் வைத்து நடைபெறும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
பிரீத்திவ் ஷா(16),மயங்க் அகர்வால்(34),கேப்டன் கோலி(2),புஜாரா(11) மற்றும் விஹாரி(7) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்திய அணி 55 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது.ரஹானே 38 ரன்களுடனும்,ரிஷாப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் கையில் ஜெமின்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.மேலும் டிரண்ட் மற்றும் சௌதி தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Discussion about this post