சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்களை, ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றி அரசியல் பணிகளில் இறங்கினார். இதனைதொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி தனது கட்சி குறித்து அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், டிசம்பர் 12ஆம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ், டிசம்பரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கு பின்னால் பாஜக இல்லை எனவும் கூறினார்.
Discussion about this post