ஜோலார்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் இறுதி கட்ட பணிக்கு 4 கோடியே 74 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு மாநில அரசு நிதி அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதியையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ஜோலார்பேட்டை பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்த நிலையில் அந்த மேம்பாலம் கட்டும் பணிக்கு மத்திய அரசுக்கு மாநில அரசு சுமார் 20 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக ஒப்புதல் அளித்தது.
அதனை தொடர்ந்து மூன்று தவணைகளாக நிதி கொடுக்க ஒப்புக் கொண்டு பணியை தொடங்கிய நிலையில் தற்போது முடியும் தருவாயில் சுமார் 4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான காசோலையை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் வழங்கினார்.
இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட அச்சக கூட்டுறவு சங்கத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிதி கொண்டு ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து திருப்பத்தூர் வரை இயக்கப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
ஆனால் தற்போது திருப்பத்தூர் மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்து பெற்றுயிருக்கும் நிலையில் மீண்டும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் வரையங்கவேண்டும் என்பது திருப்பத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது அந்த கோரிக்கை நிறைவேறுமா என்ற ஏக்கத்துடன் திருப்பத்தூர் நகர வாசிகள்.
Discussion about this post