கீரைகளில் பல வகைகள் உள்ளது, அது அனைத்திலுமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டு.
அதில் தண்டுக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
தண்டு கீரையின் மருத்துவ நன்மைகள்
தண்டு கீரையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இது உடல் எடையை குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கி, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
தண்டுக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், இளமையில் ஏற்படும் முதுமையை தடுத்து, முதுமையில் ஏற்படும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களின் குறைப்பாட்டை சரி செய்ய உதவுகிறது.
கருவுற்ற பெண்கள் தினமும் 1/2 கப் தண்டுக்கீரைச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும்.
குடல் புண் மற்றும் அல்சர் பிரச்சனையின் தீவிரம் உள்ளவர்கள் இந்த தண்டுக் கீரையை துவையலாக அல்லது லேசாக வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
குறிப்பு
தண்டுக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடலாம்.
Discussion about this post