உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போ லவும் உண்பது முறையாகும்.
வாழை இலையில் தன லட்சுமி வாசம் செய் வதாகப் புராணங்கள் கூறு கின்றன. வறுமை கஷ்டங் கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலைமுடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது.
கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.
Discussion about this post