கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் வன்முறை ஏற்பட்டதாகவும் இதனால் அதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஸ்னோலின் என்கிற மாணவி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல கடந்த 2018ஆம் ஆண்டு மே 30ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.
அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து நீங்கள் யார் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.உடனே ரஜினி நான் தாப்பா ரஜினி என்று கூறினார்.
இதன்பின்பு சமூகவலைத்தளங்களில் நான் தாப்பா ரஜினி என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வைரலாக பரவியது.பலரும் ரஜினியை கிண்டலடித்தனர்.
அந்த சந்தோஷ் வேண்டுமென்றே ரஜினியை கிண்டல் செய்யும் நோக்கில் இவ்வாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார்.இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போய்விட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் மற்றும் கால்டுவெல் மணி என்பவரும் தான் பைக்கை திருடியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பைக் திருடன் சந்தோஷ் தான் ரஜினியை ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்தபோது நீங்கள் யார் என்று கேட்டு கிண்டலடித்தவன்.எனவே தற்போது ரஜினி ரசிகர்கள் நான்தாப்பா பைக் திருடன் என்ற ஹேஸ்டேக்கை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Discussion about this post