இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெலிங்டனில் வைத்து நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 55 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடபட்டது.
ரஹானே மற்றும் ரிஷாப் பண்ட் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.அணியின் ஸ்கோர் 132ஆக இருந்தபோது பண்ட் 19 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.அதன்பின் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கின.
ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் கையில் ஜெமின்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.மேலும் டிரண்ட் மற்றும் சௌதி தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து டாம் லாதம் மற்றும் டாம் பிளண்டல் ஆகியோரை சீரான இடைவெளியில் இஷாந்த் ஷர்மா வெளியேற்றினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.ராஸ் டெய்லர் 44 ரன்களிலும்,வில்லியம்சன் 89 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.
தற்போதுவரை நியூசிலாந்து அணி 69 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்றி நோக்கோலஸ் 16 ரன்களுடனும்,பிஜே வால்டிங் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதன் மூலம் நியூசிலாந்து அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் மற்றும் ஷமி ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
Discussion about this post