ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பந்தய கார் பாலத்தின் அடியில் இருந்த வீட்டின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய காரில் இருந்தவர்கள்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம்சேரி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுப்புநாயுடுபாளையம் மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த பந்தய கார் சுப்புநாயுடுபாளையம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் அடியில் இருந்த வீட்டின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக சுதாரித்து கொண்ட காரில் இருந்த மூவர் காரில் இருந்து இறங்கினர் இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்….
கார் முழுவதும் தீப்பற்றுவதற்குள் காரில் இருந்தவர்கள் சுதாரித்து கொண்டு இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Discussion about this post