7 பேர் விடுதலை தொடர்பான மத்திய அரசின் வாதத்திற்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான விஷயம் ஆளுநரின் கையில் உள்ளது. இதில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர், தேவையற்ற மற்றும் தனது தகுதிக்கு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு நான்சென்ஸ் ஸ்டேட்மெண்ட். இது கண்டனத்திற்குரியது.
மாநில அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசின் வழக்கறிஞருக்கு யார் கொடுத்தது? மத்திய அரசின் கீழ் வரும் குற்றங்களுக்குதான் மத்திய அரசினுடைய அனுமதியை பெற வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு, ஆளுநரிடம் இருக்கும்போது அதுதொடர்பாக அவர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post