பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர், தங்களது திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என பாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
இந்தநிலையில், நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாக ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. திருமண பத்திரிகையை சமூக வலைதளங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ள அவர்கள், திருமணம் நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கவில்லை.
Discussion about this post