இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் வெலிங்டனில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதன்மூலம் இந்தியா 8 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்பு 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 1.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.
Discussion about this post