2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.பின்பு அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானநிலையத்திலிருந்து அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.
அங்கிருந்து அகமதாபாத்தில் புதிதாக கட்டியுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோரோடா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அப்போது அவர் கூறியதாவது:-‘பிரதமர் மோடி எனது உண்மையான நண்பர்.எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார்.
இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.
அன்று டீ விற்றவர் இன்று நாட்டின் பிரதமர்.கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் பிரதமர் மோடி. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.
மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது இந்தியா. இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும்.
10 ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 7 இந்தியர்கள் வறுமையில் இருந்து மீள்கின்றனர்.
இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது.
அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் குஜராத்தியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இந்தியர்கள் தாங்கள் நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவார்கள்.
விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர்.
கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது.இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு.
தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்.தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது.பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன்.
ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.இந்திய படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை வழங்க தயார்.
விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்.வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா. எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு இந்தியா.
மேலும் மக்கள் நலனை மக்கள் நலனை முன்னிறுத்துபவர்கள் வலுவான தலைவராகிறார்கள் என்றும் பேசிய அவர் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை புகழ்ந்தும் பேசினார்.
Discussion about this post