தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஷாஹின் பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் இதுவரை மூன்று முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ளார்.அவர் டெல்லிக்கு வரவுள்ள நிலையில் டெல்லி மஜ்பூரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் தலைமை காவலர் ரத்தன்லால் என்பவர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெல்லியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி டெல்லிக்கு விரைந்துள்ளார்.
Discussion about this post