திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் பழனிசாமி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதை, அரசின் தலைமை வழக்கறிஞரே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால், ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் சொல்வது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், திமுக ஆட்சியில் இருந்தவர்கள், தனது உறவினர்கள் யாருக்கும் டெண்டர் கொடுக்கவில்லை என்று டி.ஆர்.பாலு விளக்கமளித்துள்ளார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சம்பந்திக்கு உள்நோக்கத்தோடு டெண்டர் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
Discussion about this post