2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.பின்பு அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானநிலையத்திலிருந்து அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.
அங்கிருந்து அகமதாபாத்தில் புதிதாக கட்டியுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோரோடா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் கோலியை புகழ்ந்து பேசினார்.
அதில் அவர் கூறியதாவது:- ‘தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி போன்றவர்களின் சாதனைகளை கொண்டாடும் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது’என்று கூறினார்.
Discussion about this post