மலேசியாவில் தற்போது மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு பகதான் ஹரப்பன் என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தனர்.
இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தனது பிரதமர் பதவியை மகாதிர் முகமது ராஜினாமா செய்துள்ளார்.அத்துடன் அவர் தனது கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசரிடம் மகாதிர் கொடுத்துள்ளதாகவும், அதனை அரசர் ஏற்றுக்கொண்டாரா என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
94 வயது நிரம்பிய மகாதிர் 2வது முறையாக 2018-ஆம் ஆண்டில் பதவியேற்றார்.அவர் ஆட்சி அமைப்பதற்கு மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஆதரவு கொடுத்திருந்தார்.
தற்போது இவர் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டதே மகாதிர் பதவி விலகுவதற்கு காரணம் எனப்படுகிறது.
மகாதீர் ராஜினாமா செய்ததன் எதிரொலியாக மலேசிய பங்கு சந்தைகள் 2.69% வீழ்ச்சியடைந்துள்ளன. முன்னதாக சிஏஏ விவகாரத்தில் இந்திய அரசை தொடர்ந்து மகாதிர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post