சென்னையில் 3 மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய பலே திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் இருந்து, பைக்கில் சென்ற இருவர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட எதிரே காரில் வந்த நபர், பைக்குக்கு முன் நிறுத்தியபோது, பின்னால் அமர்திருந்த திருடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான். ஆனால் பைக்கை ஓட்டிச் சென்றவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதையடுத்து, நிலைதடுமாறி கீழே விழுந்த நபரை, போலீசில் பிடித்து கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பதும், இவர் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், தனது நண்பரோடு சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட பாலாஜி, திருவொற்றியூர் தொடங்கி தேனாம்பேட்டை வரை 3 மணி நேரத்துக்குள் 18 செல்போன்களை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் ஓட்டிச் சென்ற நபர் குறித்து பாலாஜியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post