சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்திருக்கிறது. சீனாவுக்கு வெளியே 30 நாடுகளில் 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரஜெசூஸ், “சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கும் இந்த வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த எடுக்க முயற்சிகளும் தோல்வியில்தான் முடிகின்றன. இத்தாலி, ஈரான், தென் கொரியா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டதற்கான ஆதாரங்களும் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி இந்த தொற்று ஏற்பட்டது என தெரியவில்லை.
இதனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
Discussion about this post