டெல்லியில் கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி வடக்கு பகுதியில் ஏற்ப்பட்டுள்ள வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை நிலை ஆளுநர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கலவரம் பாதித்த இடங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உள்துறை அமைச்சருடனான ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், வன்முறையை ஒடுக்க தேவைப்பட்டால் ரணுவம் அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post