சிஏஏவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக டெல்லியில் வன்முறை வெடித்து வருகிறது. கல்வீச்சு தாக்குதல், வீடுகள் அலுவலகங்களுக்கு தீ வைத்தல், குறிப்பாக முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வீடுகளை தாக்குதல், துப்பாக்கிச் சூடு என கடந்த இரு தினங்களாக டெல்லி வன்முறை களமாக மாறியுள்ளது. தீ வைப்பு சம்பவங்களால் டெல்லி புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.
இந்த வன்முறையால் படுகாயமடைந்து 7 பேர் வரை பலியான நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருப்பதாக ஜிடிபி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 சதவிகிதத்தினர் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்துள்ளனர் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் இன்று3 வது முறையாக வன்முறை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டம் பஜன்புராவில் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் மற்றும் கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். என்,டி.டி.வி செய்தியாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
Discussion about this post