தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமலஹாசன் பேசுவதில் யாருக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் ஒரு மணி நேரம் பேசினால், அதில் ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் இருக்காது எனவும் விமர்சித்தார். அதனால் கமல்ஹாசனை போன்றவர்களை பார்த்து அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள் என்றும் அவர் விளம்பரத்துக்காக பேசிக்கொண்டிருப்பதாகவும் கடம்பூர் ராஜூ கூறினார். மேலும், கமல்ஹாசன் ஒரு சுண்டைக்காய் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post