அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லியின் மோதிபாக் பகுதியில் உள்ள அரசு சர்வோதயா மேல்நிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகளை சந்தித்து உரையாடினார்.
மெலனியா டிரம்பை பள்ளிக்குழந்தைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாரம்பரிய உடையணிந்திருந்த குழந்தைகள் மெலனியாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவரது வருகைக்காக பள்ளி முழுவதும் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் வகுப்பறைக்கு சென்ற மெலனியா டிரம்ப் மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.
Discussion about this post