டெல்லி வடகிழக்குப் பகுதியில் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த நபர்களுக்கும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த நபர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவங்கள், கடைக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜ்பூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 23 முதல் 25ஆம் தேதி வரை சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Discussion about this post