இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்க்கு ‘கோவிட்-19’ என்று உலக சுகாதார அமைப்பு புதிய பெயரை சூட்டியுள்ளது.
சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்போது வரை 2663 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 72,000க்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 5-ம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
துரதிஷ்டவசமாக இந்த பெண் குழந்தைக்கு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர்.ஆனால் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் குழந்தை சியோசியோவுக்கு அளிக்கப்படவில்லை.
வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், 17 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை சியோசியோ எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல் தானாகவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளது.இது மருத்துவர்கள் தரப்பில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post