சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்போது வரை 2663 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 72,000க்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் ஜப்பானிலும் அதிகமாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை.
இதனால், வரும் ஜூலை மாதம் ஜப்பானில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் இதுகுறித்து கூறியதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
Discussion about this post