குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.மேலும் இதற்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் கடந்த 3 நாட்களாக வன்முறை வெடித்தது.
நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர்.
காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பக்கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் அமைதி காக்கும்படி பிரதமர் மோடி டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:-‘டெல்லி மக்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.டெல்லியில் விரைவில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவது முக்கியம் என்றும்
டெல்லி நிலவரம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் டெல்லியில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாவும்’ கூறியுள்ளார்.
Discussion about this post