குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.மேலும் இதற்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் கடந்த 3 நாட்களாக வன்முறை வெடித்தது.
நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர்.
காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பக்கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
அதன்படி வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க டெல்லி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post