வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்திற்காக வாடகை வீட்டின் உரிமையாளரை கோர்ட்டுக்கு அழைத்து அலைய வைக்காதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..
விகே குமரேசன் என்ற வழக்கறிஞர் 1113 சதுரடி கட்டிடத்தில் 1800 ரூபாய் என்று மாத வாடகைக்கு இருந்து வந்தார். வழக்கறிஞர் சரியாக வாடகையை தராத நிலையில் கட்டிடம் தனக்கு வேண்டும் என்றும் இதனால் உடனே காலி செய்ய வேண்டும் என்றும் உரிமையாளர் கேட்டார்.
இதை எதிர்த்து கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்கறிஞர் குமரேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேல்முறையீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கின் பத்தாண்டு கால நகர்வுகளை ஆய்வு செய்த நீதிபதி வைத்தியநாதன் அதிர்ந்தே போனார்..
வித்தியாச வித்தியாசமான காரணங்களை சொல்லி வழக்கை வழக்கறிஞர் பத்தாண்டு காலம் இழுத்து இருப்பதாகச் சொல்லி கண்டனம் தெரிவித்தார்.
இப்போதுகூட வேலூர் நீதிமன்றத்தில் இருந்து ராணிப்பேட்டை க்கு வழக்கை மாற்றி மேலும் இருப்பதிலேயே வழக்கறிஞர் குமரேசன் குடியிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.
கடைசியில் வழக்கறிஞர் குமரேசன் இரண்டு வாரங்களுக்குள் கட்டிடத்தை காலிசெய்து கட்டிடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்றங்களை பயன்படுத்தி வழக்கறிஞர்கள் கட்டிட உரிமையாளர்கள் இதுபோல் இழுத்தடிப்பது கூடவே கூடாது என்று கடுமையாக எச்சரிக்கையும் செய்திருக்கிறார்..
வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற எச்சரிக்கை அவசியமானதுதான். காலத்தின் கட்டாயமும் கூட.
எதற்கெடுத்தாலும், நான் யார் தெரியுமா? ஒரு லாயர் கிட்டையா வச்சிக்கிறே என்று வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் மார் தட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.. ரேஷன் கடை பஸ் ஸ்டாண்ட் கக்கூஸ் போன்ற இடங்களில் கூட, நான் பிரஸ் என்று பந்தா காட்டும் கோஷ்டிகளும் இதே ரகம்தான்.
நம்முடைய கேள்வி என்னவென்றால் வாடகை கட்டிடத்தை காலி செய்யாமல் ஒரு வழக்கை தொடுத்து அதனை 10 ஆண்டுகளுக்கு மேல் சுலபமாக இழுக்க முடிகிறது என்றால் இதில் வழக்கறிஞருக்கு மட்டுமா பொறுப்பு? மேஜிஸ்ட்ரேட் நீதிபதிகள் போன்றவர்களுக்கு பங்கே இல்லையா?
காஞ்சிபுரத்தில் பிறந்த 15-வது நாளில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் ஒரு கை துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு நிவாரணம் கேட்டு ஒரு வழக்கு தொடரப்பட்டது..
அந்த வழக்கு இன்றும் முடிவுக்கு வரவில்லை அந்த குழந்தை வளர்ந்து இருபத்தி எட்டு வயதாகி விட்டது.. 26 வருடங்களாக வழக்கு நடக்கிறது. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது..
இதுதான் நீதித்துறையின் லட்சணம்..
பாதிக்கப்பட்டவரை துடிக்கத் துடிக்க சாகடிக்க செய்வதில் தூக்குக் கயிற்றைவிட மோசமானவை இந்திய நீதி நீதித்துறையின் செயல்பாடுகள்
Discussion about this post